தொடர் கனமழையால் 2 வீடுகள் இடிந்து 9 பேர் பலி : ஹைதராபாத்தில் சோகம்!!

By: Udayachandran
14 October 2020, 2:23 pm
hyderabad Dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹைதராபாதில் 2 வீடுகள் இடிந்து 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக ஐதராபாத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அதில் உள்ள பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

இந்த நிலையில் ஹைதராபாத் பாத்தபஸ்த்தி பகுதியில் இருக்கும் கவ்ஸ் நகரில் காம்பவுண்ட் சுவர் ஒன்று இடிந்து அருகில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து 2 வீடுகள் நேற்று இரவு தரைமட்டமாகின.

அப்போது இரண்டு வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 13 பேரில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர்.
4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார்,தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் ஆகியோர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Views: - 39

0

0