லாலுவின் பாதுகாவலர்கள் ஒன்பது பேருக்கு கொரோனா..! உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பு..!

21 August 2020, 3:06 pm
lalu_prasad_yadav_updatenews360
Quick Share

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள ஒன்பது காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5’ம் தேதி, சிறை அதிகாரிகள் ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவை கெல்லியின் பங்களாவிற்கு, ராஞ்சியின் ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையிலிருந்து மாற்றினர்.

பாதிக்கப்பட்ட ஒன்பது காவலர்களும் தங்கள் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக ஒன்பது பாதுகாப்பு வீரர்களை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக யாதவின் மருத்துவர் டாக்டர் உமேஷ் பிரசாத் தெரிவித்தார்.

முன்னதாக, யாதவின் தனிப்பட்ட பராமரிப்பாளர்கள் மூன்று பேருக்கு கடந்த ஜூலை 25 அன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கொரோனா தொற்று நோயால் லாலு பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அவரை பங்களாவுக்கு நகர்த்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தனர்.

2017 டிசம்பரில் தீவனம் மோசடி வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மோசமான உடல்நிலை காரணமாக சிறைவாசம் அனுபவித்த இரண்டு மாதங்களுக்குள் ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Views: - 0

0

0