ஆந்திராவை தொடர்ச்சியாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொரோனா…! இன்று 9276 பேருக்கு பாதிப்பு
1 August 2020, 10:06 pmஐதராபாத்: ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது, அதிர்ச்சியை தந்திருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத வகையில் உள்ளது. கடந்த 3 நாட்களாக 10000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் இன்றைய கொரோனா தொற்று விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இன்று 9,276 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,209 ஆக உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது.
அதுவும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டு மொத்தமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்து உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 76,614 பேர் குணமடைந்து விட்டனர்.
இன்னமும் 73,188 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அனைத்து சிகிச்சை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டு இருக்கின்றன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.