24 மணி நேரம்..! இந்தியாவில் மிரள வைக்கும் கொரோனா பலி…!
8 August 2020, 12:04 pmடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு 933 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வரை கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்திருந்தது.
ஆனால் ஒரேநாளில் 62 ஆயிரம் தொற்றுகள் பதிவாகி ஒட்டுமொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை இப்போது கடந்துள்ளது. ஆக இப்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 ஆக இருக்கிறது.
இது வரை 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துவிட்டனர். 41,585 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் கொரோனா தொற்றுக்கு 24 மணிநேரத்தில் 61,537 பேர் ஆளாகி உள்ளனர். ஆகையால் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உள்ளது.
6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஒரே நாளில் 933 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
0
0