டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்வு…!!

18 October 2020, 7:46 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,017 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 2,863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,716 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 23,292 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.