ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் !!

Author: Udayaraman
27 July 2021, 10:58 pm
earthquake - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அரசியல் விவகாரம் பெரும் குழப்பமான சூழலில் உள்ளது. அமெரிக்கப்படைகள் நாடு திரும்பியதால் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு யூகங்களை அமைத்து வருகிறது.இந்த சூழலில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் பகுதியில் இன்று மாலை பைசாபாத் பகுதியில் இருந்து 188 கி.மீ தொலைவில் 160 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஒருசில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது. லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 146

0

0