குடிமகன்களால் உயரப் போகும் ஏழை பெண்களின் வாழ்வாதாரம்.. பீகார் அரசின் புதிய முயற்சிக்கு குவியும் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 9:03 pm
Bihar Liquor - Updatenews360
Quick Share

வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிப்பதன் மூலம் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை பீகார் மாநில அரசு மேம்படுத்த உள்ளது.

இது குறித்து மாநில மது விலக்குத்துறை அமைச்சர் கூறியதாவது: மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மது பாட்டில்கள் கைப்பற்றப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இயந்திரங்கள் மூலம் அவற்றை அழிக்கும் போது அதிக அளவில் கழிவு உருவாகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையி்ல் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கண்ணாடி வளையல்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. என கூறினார்

மேலும் ஊரகத்துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறியதாவது: ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் ஜீவிகா அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பொருளதார ரீதியாக தன்னிறைவு அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தற்போது நொறுக்கப்பட்ட மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல் தயாரிக்கும் மூலப்பொருளாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

துவக்கத்தில்ேஇவை குறைவாக இருந்தாலும் வரும் காலங்களில் அவை அதிகரிக்கப்படும். இவை குடிசை தொழிலாக செயல்படும். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தலைநகர் பாட்னாவில் இருந்து துவங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். என அமைச்சர் கூறினார்.

Views: - 351

0

0