பொதுவாழ்வில் தனித்து விளங்கியவர் : சரத் யாதவ் மறைவு குறித்து: பிரதமர் மோடி இரங்கல்!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான தனது 75வது வயதில் நேற்று (ஜனவரி 12ஆம் தேதி) இரவு காலமானார்.

இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார்.

2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார்.

இதனையடுத்து மார்ச் 2022-ல், யாதவ், முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எல்ஜேடி கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார்.

இந்த சூழலில் வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

சரத்யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் மந்திரி என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

45 seconds ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

36 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

54 minutes ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

1 hour ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

2 hours ago

This website uses cookies.