ராமநவமி ஊர்வலத்தில் கல்வீச்சு…வன்முறையாளர்கள் குறித்து தகவல் சொன்னால் ‘ரூ.10,000’ சன்மானம்: ம.பி. போலீசார் அறிவிப்பு..!!

Author: Rajesh
21 April 2022, 6:10 pm
Quick Share

போபால்: மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ம் தேதி அன்று ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ம் தேதி அன்று ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் கல் வீச்சு காரணமாக பல பேர் காயமடைந்தனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த வீடியோ காட்சிகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களால் சில நபர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 106 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். முன்னதாக, கார்கோன் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக மத்தியப் பிரதேச அரசு ரூ.1 கோடியை நிவாரணத் தொகையாக ஒதுக்கீடு செய்தது. இதற்கிடையே, ராம நவமி ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களுக்கு சொந்தமான சட்டவிரோத கட்டிடங்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இடித்து தள்ளியது.

Gujarat clash

அதிகாரிகள் சுமார் 45 வீடுகள் மற்றும் கடைகள் மீது புல்டோசர் ஏற்றி இடித்தனர். அவ்வாறு 16 வீடுகள் மற்றும் 29 கடைகள் இடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு மத்தியப் பிரதேச போலீசார் வெகுமதியை அறிவித்துள்ளனர். கார்கோன் வன்முறையில் ஈடுபட்ட ‘சமூக விரோதிகள்’ குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Views: - 561

0

0