பெட்ரோல் பங்கில் டீசல் பிடித்து கொண்டிருந்த லாரி டயர் வெடித்து தீ விபத்து…

17 August 2020, 10:36 pm
Quick Share

ஆந்திரா: ஓங்கோல் அருகே பெட்ரோல் பங்கில் டீசல் பிடித்து கொண்டிருந்த லாரி டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் அருகே இருக்கும் சூரா ரெட்டி பெட்ரோல் பங்கில் இன்று மாலை மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி ஒன்றை நிறுத்திய டிரைவர், டீசல் பிடித்து கொண்டிருந்தார். அப்போது பலத்த சத்தத்துடன் அந்த லாரியின் பின்பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டீசல் பிடித்து கொண்டிருந்த ஊழியர் கையிலிருந்த டீசல் பிடிக்க பயன்படுத்தப்படும் பைப்பை கீழே போட்டு விட்டார். அப்போது வெடித்த டயரில் இருந்து சிதறிய தீப்பொறி டீசல் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக டிரைவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாத வகையில் கட்டுப்படுத்தி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் பங்கிற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து தீ கரையனது.

Views: - 18

0

0