ஜீப்பில் சென்றவர்களை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை… நூலிழையில் உயிர்தப்பிய வைரல் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 9:11 pm
Quick Share

மைசூர்: கர்நாடகாவில் டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை ஆக்ரோஷமாக காட்டு யானை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிரக்கிங் என்ற பெயரில் வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று பார்க்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்கும் தாக்க முயலும் நிகழ்வுகளும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

இதுபோன்ற நிகழ்வுதான் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள கபினி பகுதியில் நடந்துள்ளது. கபினி பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றிருந்த போது, வனப்பகுதியில் ஜீப்பில் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்த பெரிய ஆண் காட்டு யானை ஒன்று, அந்த ஜீப்பின் முன்னால் திடீரென வந்து நின்றது.

இதை பார்த்த அவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டதும் ஆக்ரோஷமான காட்டு யானை ஜீப்பை துரத்த தொடங்கியது. யானை முன்னால் இருப்பதால் டிரைவரால் ஜீப்பை உடனடியாக திருப்ப முடியவில்லை. எனினும், மிக சாதுரியமாக ரிவர்ஸ் கியர் போட்டு ஜீப்பை பின்னால் வேகமாக இயக்கினார். ஆனால் காட்டு யானை விடாமல் கோபத்தில் பிளிறிய படியே ஜீப்பை துரத்தியது.

ஒருகட்டத்தில் ஜீப்புக்கு மிக நெருக்கமாவே யானை வந்தது. ஆனால் சற்றும் பிசகாமல் ஜீப்பை சாமர்த்தியமாக பின்னால் ஓட்டிச் சென்றார் அந்த டிரைவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 388

0

0