தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து ஐதராபாத் வழியாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பாமுருவுக்கு 35 பயணிகளுடன் ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது.
பேருந்தில் டிரைவர்கள் சித்தையா மற்றும் கிருஷ்ணா (40) ஆகிய இரு டிரைவர்கள் இருந்தனர். நிர்மலிலிருந்து வந்த வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் சித்தையா ஓட்டி வந்தார். நிர்மலில் 27 வயது பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் ஏறினார்.
அப்போது கூடுதல் டிரைவர் கிருஷ்ணா அந்த பெண் தனியாக வந்ததை கவனித்தார். மேலும் அந்த பெண் தனக்கு மட்டுமே டிக்கெட் எடுத்திருப்பதையும் தன் மகளுக்கு எடுக்காமல் இருப்பதையும் கவனித்தார்.
இதனால் பேருந்தின் நடு இருக்கைக்கு பதிலாக கடைசி இருக்கையில் சீலிப்பர் கோச்சில் குழந்தையை படுக்க வைப்பத்தால் சிக்கல் இருக்காது என கிருஷ்ணா கூறினார்.
அவன் சொன்னபடியே குழந்தையுடன் கடைசி இருக்கையில் சென்று அந்த பெண் தூங்கினாள். பேருந்து நள்ளிரவு 12:15 மணிக்கு ஐதராபாத் அருகே வந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது கூடுதல் டிரைவர் கிருஷ்ணா பின் இருக்கைக்கு சென்று அங்கு சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அந்த பெண் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வாயில் போர்வையை அமுக்கி பாலியியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு ஒன்றும் நடக்காதது போல் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சித்தையாவின் பக்கவாட்டில் அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாதிக்கப்பட்ட பெண் டயல்-100க்கு போன் செய்து தனக்கு நேர்ந்ததை போலீசாருக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார், பேருந்து செல்லும் இடத்தை கண்டறிந்து தர்நாகா மெட்ரோ ரயில் நிலையத்தில் பேருந்தை பிடித்தனர். அதற்குள் டிரைவர் கிருஷ்ணா மேட்டுகுடா சந்திப்பில் பஸ்சில் இருந்து குதித்து தப்பி சென்றதாக சக பயணிகள் தெரிவித்தனர்.
பேருந்தை ஓட்டி வந்த சித்தய்யாவை கைது செய்த பேருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து உஸ்மானியா பல்கலைகழக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர் : அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!
கிருஷ்ணாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை இரவு அவரை கைது செய்தனர். ஓடும் பேருந்தில் பெண் பயணி பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
This website uses cookies.