செல்பி மோகம்…. கைதவறி விழுந்த செல்போனை பிடிக்க சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி

4 August 2020, 10:25 pm
Quick Share

தெலுங்கானா: தெலுங்கானாவில் கைதவறி விழுந்த செல்போனை பிடிக்க சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள லொத்தி நீர்வீழ்ச்சிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் ஜாலியாக பொழுதை கழிப்பதற்காக சென்றிருந்தனர். அப்போது அவர்களில் 19 வயதுடைய சச்சின் என்ற இளைஞர் நீர்வீழ்ச்சி மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றார். இந்தநிலையில் அவர் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீரால் அடித்து செல்லப்பட்டது. தவறிவிழுந்த செல்போனை பிடிப்பதற்காக சச்சின் நீர்வீழ்ச்சி வழியாக ஓடினார். அப்போது கால் தவறி விழுந்த சச்சின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சுழலில் சிக்கி காணாமல் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சச்சினை தேடிய மீட்புக்குழுவினர் இன்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 7

0

0