உல்ஃபா அமைப்பின் துணைத் தலைவர் ராணுவத்திடம் சரண்டர்..! இளம் ராணுவ உளவாளியின் 9 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!

12 November 2020, 2:42 pm
ulfa_surrender_updatenews360
Quick Share

வடகிழக்கில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுவான உல்ஃபா (ஐ) அமைப்பின் துணைத் தளபதி தனது நான்கு மெய்க்காப்பாளர்களுடன் இந்திய அரசிடம் சரணடைந்தார். இது இந்திய பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மேலும், ஒன்பது ஆண்டுகளாக இதற்காக ஒரு இளம் ராணுவ உளவுத்துறை அதிகாரி தொடந்து உழைத்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தடைசெய்யப்பட்ட கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த மேஜர் ரபா அல்லது த்ரிஷ்டி அசோம் என்றும் அழைக்கப்படும் த்ரிஷ்டி ராஜ்கோவா நேற்று இரவு இந்திய ராணுவத்தின் ரெட் ஹார்ன்ஸ் பிரிவிடம் சரணடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வடகிழக்கில் பல தாக்குதல்களுக்கு பொறுப்பான ஆர்பிஜி நிபுணரான ராஜ்கோவா, சீனாவில் பதுங்கியிருக்கும் உல்ஃபா (ஐ) தளபதி பரேஷ் பருவாவின் நெருங்கிய நம்பிக்கை கொண்டவர். 2011’ஆம் ஆண்டு வரை உல்ஃபா (ஐ) அமைப்பின் 109 பட்டாலியனின் தளபதியாக ராஜ்கோவா இருந்தார். பின்னர் பருவா அவரை தனது துணைத் தலைவராக உயர்த்தினார்.

இந்த சரணடைதல் பாருவா, உல்ஃபா (ஐ), அதன் உறுப்பினர்கள் மற்றும் பிராந்தியத்தில் அமைப்பின் செயல்பாட்டிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், வடகிழக்கு மாநிலங்களிலும், பங்களாதேஷிலும் கூட ராஜ்கோவா பல தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாக்காவிலிருந்து வடக்கே 120 கி.மீ தூரத்தில் பங்களாதேஷின் மைமென்சிங் நகரில் அவர் சில காலம் மறைந்திருந்தார்.

பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி வந்த இவர், இதற்காக அடிக்கடி மேகாலயா மற்றும் பங்களாதேஷில் உள்ள கரோ ஹில்ஸுக்கு இடையே பயணம் மேற்கொண்டு வந்தார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கரோ கிளர்ச்சியாளர்களால் அவர் கௌரவ தலைவராக கருதப்பட்டார்.

ராஜ்கோவா இதற்கு முன்பு ராணுவத்திடம் இருந்து பலமுறை தப்பியுள்ளார். பிராந்தியத்தில் கிளர்ச்சியை ஒழிப்பதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, அவர் இராணுவத்திற்கு முன் சரணடைந்தது மத்திய அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சரணடைதல் என்பது ராணுவ உளவுத்துறை அதிகாரி மேற்கொண்ட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒன்பது ஆண்டுகால நேர்மையான முயற்சிகள் மற்றும் இராணுவ புலனாய்வு அமைப்பின் விரைவான திட்டமிடல் ஆகியவற்றின் விளைவாகும் என்று அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

இளம் ராணுவ உளவுத்துறை கேப்டன் 2011’ல் பயங்கரமான கிளர்ச்சியாளருடன் தொடர்பு கொண்டார் மற்றும் பல இடமாற்றங்கள் இருந்தபோதிலும் அவருடன் தனது தொடர்பு சேனலைப் பராமரித்தார். இந்த காலகட்டத்தில், அந்த அதிகாரி தனது தனிப்பட்ட பாதுகாப்பைப் புறக்கணித்து, கிளர்ச்சியாளரை நேரடியாக சந்தித்து சரணடையும்படி ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

அவரது பல உரையாடல்களால், கிளர்ச்சியாளரின் கடுமையான பார்வையை மென்மையாக்க அதிகாரியால் முடிந்தது. மேலும் பிராந்தியத்தில் உள்ள மக்களின் செழிப்புப் பாதையில் கிளர்ச்சியே மிகப்பெரிய தடையாக இருப்பதை அவர் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதியாக, ராஜ்கோவா நேற்று சரணடைய ஒப்புக்கொண்டார்.

டெல்லியில் உள்ள ராணுவ உளவுத்துறை ஊழியர்கள், ராணுவ உளவுத்துறையின் இயக்குநர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் சரணடைதல் திட்டத்தை வகுத்தனர். இராணுவத்தின் மேகாலயாவை தளமாகக் கொண்ட ரெட் ஹார்ன்ஸ் பிரிவின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நேற்று நள்ளிரவில், இந்த சரணடைதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ராஜ்கோவா தனது நான்கு மெய்க்காப்பாளர்களுடன் சரணடைந்தார். மேலும் ஒரு ஏ.கே.-81 தாக்குதல் துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொடுத்தார். பின்னர், அவர்கள் பெயர் வெளியிடப்படாத பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 23

0

0

1 thought on “உல்ஃபா அமைப்பின் துணைத் தலைவர் ராணுவத்திடம் சரண்டர்..! இளம் ராணுவ உளவாளியின் 9 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!

Comments are closed.