குடித்துவிட்டு நடுரோட்டில் இளம்பெண் அட்டகாசம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 10:05 pm
Woman - Updatenews360
Quick Share

காதல் தோல்வியால் குடித்துவிட்டு நடுரோட்டில் இளம்பெண் அட்டகாசம் : அதிர்ச்சி வீடியோ!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதையில் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் பாடாய் படுத்துகிறார்.

கார் மீது ஏறுகிறார், ஒருவரின் ஸ்கூட்டரை பிடுங்கிக்கொள்கிறார், சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார். பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள்.ஆனால் அவர் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.
இறுதியில் அங்கு சுற்றி இருந்த பெண்கள் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள்.

இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம் என்று ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 109

0

0