”ஆசீர்வாதம் யாத்திரை” : 10ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 2:36 pm
JB Nadda- Updatenews360
Quick Share

டெல்லி : பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆசீர்வாதம் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த யாத்திரையின் போது, பாஜக அரசின் செயல் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அவர்கள் மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் உதகை, கோவை, நாமக்கல் தொகுதிகளில் ஆசீர்வாதம் யாத்திரை செல்கிறார். இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 577

0

0