காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த 150 இந்தியர்கள் கடத்தல்? தலிபான்கள் மறுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 2:10 pm
Taliban Refuse-Updatenews360
Quick Share

காபூல் : ஆப்கன் தலைநகரமான காபூலில் 150 இந்தியர்களை தலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக வந்த தகவலுக்கு தலிபான்கள் மறுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து காபூலில் இருந்து மற்ற நாட்டினர் உட்பட ஆப்கன் மக்களும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150க்கும் மேற்பட்டவர்களை தலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆப்கனை விட்டு வெளியேற பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் காபூல் ஹமீது ஹர்சாய விமான நிலையம் அருகே குவிந்தனர்.

இந்த நிலையில் அவர்களில் இந்தியர்களை கடத்தியதாக தகவல் வெளியானதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அகமதுல்லா, இந்தியர்களை கடத்தவில்லை என்றும் வெளியான தகவலில் உண்மையில் என தெரிவித்துள்ளார்.

Views: - 324

0

0