3 வார சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த ஆர்யன்கான் : மகிழ்ச்சியில் திளைக்கும் மன்னட் இல்லம்..!!!

Author: Babu Lakshmanan
30 October 2021, 2:30 pm
aryan khan - updatenews360
Quick Share

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீனில் இன்று வெளியே வந்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

இதையடுத்து, இருமுறை அவரது ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வெள்ளிக்கிழமை தோறும் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில், ஏதேனும் ஒரு நிபந்தனையை மீறினால் கூட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலையில் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஆர்யன்கான் இன்று வெளியே வந்தார். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும், அவர் சிறையில் இருந்து வெளியே வர ஏன் தாமதம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ஆவணங்கள் தொலைந்து போனதால், ஆர்யன்கான் சிறையில் இருந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு வெளியே வந்த ஆர்யன் கான், அங்கு நின்றிருந்த ரேஞ்ச் ரோவர் காரில் ஏறிச் சென்றார். மகன் சிறையில் இருந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்த ஷாருக்கானின் மன்னட் இல்லம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.

Views: - 407

0

0