உயிருக்கு போராடிய பெண்ணிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட் : வேற லெவல் ஹீரோ!!

4 May 2021, 11:17 am
Sonu Sood -Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : கொரோனா நோயால் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற நடிகர் சோனு சூட் ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்து சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது.

நடிகர் சோனு சூட் பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் ஹீரோவாக வலம் வரும் அவர், ஏழைகள், கொரோனா நோயாளிகள் என பல்வேறு தரப்பட்மவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஜான்சியை சேர்ந்த கைலாஷ் என்ற் 25 வயது பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பல மருத்துவமனைகளின் படியேறி இறங்கிய பெண்ணின் உறவினர்கள், இடம் கிடைக்காததால் கடும் அவதியுற்றனர். பின்னர் நடிகர் சோனு சூட்டிடம் டிவிட்டர் மூலம் தங்களது வேதனையை கூறி உதவி கேட்டனர்.

இதையடுத்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த நடிகர் சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு செல்ல தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஜான்சியில் இருந்து ஐதராபாத் வரழைக்கப்பட்ட பெண், தற்போது அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Views: - 70

0

0