சுஷாந்த் சிங் மரண வழக்கு : அடுத்தடுத்த திருப்பங்களால் சங்கிலிபோல் தொடரும் விசாரணை..!

6 September 2020, 12:06 pm
Quick Share

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையில் நடிகை ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கின் விசாரணை சங்கிலிபோல் தொடர்கிறது. வழக்கை திசை திருப்ப பலரும் முயற்சி செய்வதாகவும் கருத்துகள் வெளியாகி வருகிறது.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரபோர்த்தி, சுஷாந்த்சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் விடுத்துள்ளனர். இன்று காலை ரியா இல்லத்திற்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மனை வழங்கினர்.

Views: - 4

0

0