பகவான் கிருஷ்ணரை நேரில் சந்திக்க விரும்பிய ரஷ்ய பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!

24 January 2021, 4:17 pm
Girl_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனில் நேற்று ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த அந்த பெண் பிருந்தாவன் தாம் குடியிருப்பில் தங்கியிருந்தார். பிருந்தாவன் தாம் அபார்ட்மெண்ட் ரஷ்ய கட்டிடம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இறந்தவர் டாட்டியானா ஹ்மெலோவ்ஸ்கயா என அடையாளம் காணப்பட்டார். சுற்றுலா விசாவில் இந்தியா வந்த அவர் ரஷ்யாவின் ரோஸ்டோ நகரைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணரின் தீவிர பக்தையான அவர், பகவான் கிரிஷ்ணரை நேரடியாக சந்திக்க வேண்டும் என தன்னுடைய நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த குடியிருப்பின் 6’வது மாடியில் அந்த பெண் தனியாக தங்கியிருந்த நிலையில், 6’வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருடைய பெண் நண்பர்களில் ஒருவரும் அதே கட்டிடத்தில் தங்கியிருந்த நிலையில், ஹேமலோவ்ஸ்கயா கிருஷ்ணரை சந்திக்க விரும்புவதாக கூறியதை போலீசாரிடம் கூறினார்.

இந்நிலையில் ரஷ்ய பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோனாதைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த பெண்ணின் தற்கொலை குறித்து ரஷ்ய தூதரத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0