பிரபல நடிகருக்கு கோவில் கட்டிய ஆதிவாசி மக்கள் : திடீர் விசிட் கொடுத்த நடிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 3:46 pm
Sonu sood - Updatenews360
Quick Share

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்டம் செல்மிதாண்டா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு கோயில் ஒன்றை கட்டி அதில் அவருடைய சிலையை நிறுவியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் அவர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளுக்காக அங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டது.

இந்த நிலையில் தன்னுடைய கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்று இரவு சித்தி பேட்டை வந்தார் சோனு சூட். இன்று காலை அவர் செல்மிதாண்டா கிராமத்திற்கு வந்தார்.

அவரை அன்புடன் வரவேற்ற கிராம மக்கள் அவரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். தன் மீது இருக்கும் அன்பு காரணமாக கிராம மக்கள் தனக்கு கட்டிய கோவிலை பார்த்த அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

Views: - 267

0

0