இனி இந்தியா To சிங்கப்பூருக்கு பஸ்லயே போகலாம்: 20 நாட்களில் 5 நாடுகளை சுற்றிப்பார்க்க ரெடியா?….

30 January 2021, 3:39 pm
india-to-singapore - updatenews360
Quick Share

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஒரு டிராவல்ஸ் அறிவித்து அனைவரது கவனைத்தையும் ஈர்த்து, பயணத்தை காதலிப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Adventures Overland என்ற டிராவல்ஸ் நிறுவனம் அட்டகாசமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, டெல்லியிலிருந்து இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவித்தது. இதுதான் உலகிலேயே மிக நீண்ட சாலைப் பயணம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் பயணத்திற்கு 195 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.

அந்த அறிவிப்பிற்கு கிடைத்த வரவேற்பை மூலதனமாகக் கொண்டு தற்போது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அளிக்கவிருப்பதாக அட்வெஞ்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாடுகளை இணைக்கும் இந்தியா-சிங்கப்பூர் பேருந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலிலிருந்து கிளம்புகிறது. அங்கிருந்து கிளம்பிய பின் மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வழியாக 4,500 கிலோமீட்டர் தூரம் பயணித்து சிங்கப்பூருக்கு பேருந்து சென்றடையும். இந்தப் பயணத்தின் காலம் 20 நாட்கள்.

நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படுகிறது. இந்தப் பயணம் காலே, யாங்கான், பேங்காக், க்ராபி, குலாம்பூர் உள்ளிட்ட நகரங்களை இணைப்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மொத்தமாக ஒரு பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும் என்றும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது. 20 நாட்கள் பயணம் என்பதால் பல்வேறு வசதிகள் பேருந்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது.

இந்த பேருந்து பயணத்திற்கான கட்டணம் தோராயமாக ரூ.6.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண தொனை எந்த அளவிற்கு உண்மை என உறுதிபட தெரியவில்லை.

Views: - 25

0

0