‘இ.எம்.ஐ கட்ட 2 ஆண்டுகள் அவகாசம்’ – ஆர்.பி.ஐ-க்கு மத்திய அரசு விளக்கம்..!

1 September 2020, 12:01 pm
Quick Share

வங்கி தவணை அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள இ.எம்.ஐ கட்ட 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க முடியும் என ஆர்.பி.ஐ-க்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.

ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சாதாரண வாழ்கையை கூட நெருக்கடியுடன் கொண்டு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், வணிக ரீதி மற்றும் தனிப்பட்ட முறையில் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6 மாத காலம் வழங்கப்பட்ட வங்கி தவணை அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

சமீபத்தில் வங்கி கடன் வசூலிப்பது தொடர்பாக விசாரணைக்கு வந்த வழக்கின்போது, கொரோனா பேரிடரில் இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது சரியா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாசிடம் வங்கியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அதில், வங்கி கடனை திருப்பி செலுத்த இனியும் கால அவகாசம் வழங்கினால், கடனை திருப்பி செலுத்துவதில் சிறமம் ஏற்படும் எனவும், இந்த சூழலை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால், இந்த மாதத்தில் இருந்து, கடனை திருப்பி செலுத்தும் முறை பழய நிலமைக்கு செல்லும் எனவும், தவணை அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்காது எனவும் தகவல் வெளியானது.

இந்த சூழலில் மத்திய அரசு இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இ.எம்.ஐ கட்ட 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க முடியும் என ஆர்.பி.ஐ-க்கு மத்திய அரசு அறிவுறை வழங்கியுள்ளது.

கொரோனா பேரிடரில் இருந்து இனியும் மீண்டுவராத நிலையில் வங்கி கடன் தவணை அவகாசத்தை நீட்டிக்காமல் இருப்பது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0