‘எல்லாம் முடிஞ்சுபோச்சு’: இந்தியா திரும்பிய ஆப்கன் எம்.பி. கண்கலங்கி வேதனை..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 6:10 pm
Quick Share

புதுடெல்லி: காபூலில் இருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி, ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று தேம்பிய குரலில் கண்கலங்க பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா, காபூலில் இருந்து இந்திய விமானப் படையால் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார். இந்தியா வந்த பின்பு பேசிய நரேந்திர சிங் கல்சா, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் கட்டி எழுப்பப்பட்ட அனைத்தும் இப்போது முடிந்துவிட்டன. இப்போது எல்லாம் பூஜ்ஜியமாக உள்ளது என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்ப உதவிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய விமானப்படைக்கும், தனது சமூக உறுப்பினர்களுக்கும் கல்சா நன்றி தெரிவித்தார்.

தலிபான்களை ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தற்போது 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் காபூலில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

Views: - 329

0

0