தாண்டவமாடும் “தாண்டவ்” வெப் சீரீஸ் விவகாரம்..! கதையை மாற்ற தயாரிப்புக் குழு முடிவு..!
20 January 2021, 2:37 pmஇந்து தெய்வங்களை அவதூறாக சித்தரித்து, அமேசான் பிரைம் வீடியோ எனும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் தாண்டவ் வெப் சீரீஸ் நடிகர்கள் மற்றும் குழுவினர், பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக கதையில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்து கடவுள்களை அவதூறாக சித்தரித்து வெளியான தாண்டவ் வெப் சீரீஸ் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
இந்த வெப் சீரீஸுக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பல அரசியல் தலைவர்கள் அதை தடை செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தாண்டவ் குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தாண்டவ் நடிகர்கள் மற்றும் குழுவினர் எந்தவொரு தனிநபரின் உணர்வுகளை புண்படுத்தவோ அல்லது எந்த அரசியல் கட்சியையும் அவமதிக்கவோ விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
“எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்துகிறோம். எந்தவொரு தனிநபர், சாதி, சமூகம், இனம், மதம் அல்லது மத நம்பிக்கைகளின் உணர்வுகளை புண்படுத்தவோ அல்லது எந்தவொரு நிறுவனத்தையும், அரசியல் கட்சியையும் அவமானப்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை. தாண்டவின் நடிகர்கள் மற்றும் குழுவினர் வலைத் தொடரில் மாற்றங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நன்றி. இந்தத் தொடர் தற்செயலாக யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால் நாங்கள் மீண்டும் மன்னிப்பு கோருகிறோம்.” என்று தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
0
0