மேலும் ஒரு அமைச்சர் பதவி ராஜினாமா… உ.பி.யில் பாஜகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… குஷியில் காங்.,!!

Author: Babu Lakshmanan
13 January 2022, 5:21 pm
Quick Share

லக்னோ : உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது பாஜக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இயே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கப்பட்டு வருகறிது. அதாவது, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களின் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் மற்றும் 5 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு), அமைச்சராக இருந்த தரம் சிங் சைனி, தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பா.ஜ.க, புறக்கணித்து வருவதால் தாம் பதவி விலகியதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜன.,20ம் தேதி வரை தினமும் ஒரு அமைச்சர் மற்றும் 3 அல்லது 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தொடர்ந்து ராஜினாமா செய்யும் காட்சிகள் அரங்கேறுவதால் பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினருக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 191

0

0

Leave a Reply