கொரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா..!!

15 July 2021, 5:10 pm
Quick Share

பெங்களூரு: கொரோனா தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்து உள்ளதாவது, குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

yediyurappapti_updatenews360

அத்தகைய குடும்பங்களுக்கு உதவ கர்நாடகாவில் பிபிஎல் அட்டைதாரர் குடும்பத்தில் தொற்றுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதலமைச்சர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளான் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் 2020 – 21ம் நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 154

0

0