இப்படியும் நடக்குமா..? குடிகார மனைவியால் தினம் தினம் சித்திரவதை..! கணவர் பரபரப்பு புகார்..!

19 September 2020, 4:49 pm
Drunken_Wife_UpdateNews360
Quick Share

அகமதாபாத் நகரத்தின் மணிநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை தனது குடிகார மனைவி தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர் காவல்துறையிடம் கேட்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புகார் செய்த கணவர், தாங்கள் இருவரும் விரும்பி 2018 மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறினார். ஆனால் அவர்கள் திருமணத்திற்குப் பிறகுதான் அவர் மதுவுக்கு அடிமையானதைப் பற்றி அறிந்து கொண்டார்.

அவர், மதுவுக்கு அடிமையாகி தன்னையும் தனது பெற்றோர்களையும் உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்துகிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். குடிபோதையில், அவர் சில நேரங்களில் தனது பணியிடத்திற்கு வந்து தொல்லை செய்ததாக மேலும் தெரிவித்தார்.

மனைவி என்னை சித்திரவதை கணவன் புகார் :தன்னுடன் வசிக்கும் வயதான பெற்றோரை வீட்டை விட்டு வெளியேறும்படி தனது மனைவி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக அந்த நபர் கூறினார். ஜூன் மாதத்தில், அவரது பெற்றோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். அதைத் தொடர்ந்து அவர்களின் உடல்நிலையைக் கவனிப்பதற்காக அவர்களது வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் கணவன் தங்கினார். 

அதைத் தொடர்ந்து, அவரது மனைவி வீட்டின் முதல் மாடிக்கு மாறினார், ஆனால் நோயுற்ற பெற்றோரை கவனித்துக்கொள்வதில் ஒருபோதும் உதவவில்லை. மாறாக, வீட்டின் உரிமையை தனக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.

அவர்கள் தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தனது வாழ்க்கையை முடித்துவிடுவதாக அவர் அச்சுறுத்தியதாக கணவன் கூறினார்.

மனைவி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்த கணவர் :
“ஜூன் மாதம் அவரது மனைவி கோக்ரா காவல் நிலையத்தில் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் எதிராக ஒரு மனுவை சமர்ப்பித்ததாக ஒரு போலீஸ் அதிகாரிதெரிவித்தார்.

பின்னர் செப்டம்பர் 11 அன்று, தான் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் அளித்தார். குற்றம் சாட்டிய அந்த மனைவி இன்னும் வீட்டின் முதல் மாடியில் தான் வசிக்கிறார்.

மது அருந்தியபின் கணவனைக் கொடுமைப்படுத்திவிட்டு, கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் செய்ய பெண்களின் ஹெல்ப்லைனை டயல் செய்கிறார் என்று கணவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

போலீஸ் பாதுகாப்பை நாடிய கணவர் :
அந்த நபர், காவல்துறைக்கு அளித்த மனுவில், வயதான பெற்றோருக்கும் மற்றும் தனக்கும் ஏதேனும் நேர்ந்தால், அவரது குடிகார மனைவி தான் காரணமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். எனவே, கணவர் மற்றும் அவரது பெற்றோரின் பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார். 

இதற்கிடையே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து பின்னர் நடவடிக்கை எடுப்போம் என்று கோக்ரா காவல் நிலைய ஆய்வாளர் ஒய்.எஸ்.காமித் தெரிவித்தார்.

Views: - 5

0

0