தடுப்பூசியால் மட்டுமே கொரோனா ஒழிந்துவிடாது: அதிர்ச்சி தகவல்…!!

8 November 2020, 4:44 pm
delhi aims - updatenews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என்று தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவிற்கான தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்றும், தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்த பிறகு இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டபோது, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் வகையில் தடுப்பூசியின் விநியோகம் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Views: - 20

0

0