ஒவைசிக்கு மிகப்பெரும் பின்னடைவு..! மேற்கு வங்கத்தில் கட்சி தாவிய ஏஐஎம்ஐஎம் ஒருங்கிணைப்பாளர்..!

23 November 2020, 4:51 pm
AIMIM_Anwar_Pasha_UpdateNews360
Quick Share

மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு அரசியல் உரையாடலிலும் ஏஐஎம்ஐஎம் ஒரு பரபரப்பான விவாதமாக மாறியுள்ள ஒரு நேரத்தில், கட்சியின் மேற்கு வங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாஷா ஆளும் திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி)  இணைந்து ஒவைசிக்கு அதிர்ச்சியளித்துள்ளார். 

அன்வர் பாஷா கொல்கத்தாவிலுள்ள அதன் மாநில தலைமையகத்திலிருந்து விலகி, அதிகாரப்பூர்வமாக டி.எம்.சியில் சேர்ந்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் தோல்விக்கு காரணமாக ஒவைசி கட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கட்சித் தாவல் மேற்கு வங்க அரசியலை உலுக்கியுள்ளது.

பீகார் தேர்தல்களுக்குப் பிறகு, சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்க ஏஐஎம்ஐஎம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆர்ஜேடி தலைமையிலான மகாகத்பந்தனின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் இருந்ததாக ஒவைசி மீது குற்றம் சாட்டப்படுகிறது.  

இதே போல் மேற்கு வங்க தேர்தல்களில் குறைந்தபட்சம் 30% சிறுபான்மையினரின் வாக்குப் பங்கைக் கொண்டிருப்பதை ஏஐஎம்ஐஎம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து, மேற்கு வங்கத்தில் அடிமட்டத்தில் தனது கட்சியை பலப்படுத்தி வருகிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், இப்போது பிரசாந்த் கிஷோரால் வழிநடத்தப்படுகிறது.

“பாராளுமன்றத்தில் மசோதாவைக் கிழிப்பதன் மூலம் எதுவும் அடைய முடியாது. மம்தா பானர்ஜி செய்ததைப் போல ஒருவர் வீதிகளில் இறங்கி செயல்பட வேண்டும்” என்று முன்னாள் ஏஐஎம்ஐஎம் ஒருங்கிணைப்பாளர் அசாதுதீன் ஒவைசியை விமர்சித்தார்.

“நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். வங்காளத்திற்கு வர வேண்டாம், வங்காளத்திற்கு நீங்கள் தேவையில்லை. ஆனால் நீங்கள் இன்னும் வர விரும்பினால், நாங்கள் உங்களை எதிர்த்துப் போராடுவோம்” என பாஷா மேலும் கூறினார்.

ஒவைசி வங்கத்தில் போட்டியிட்டால் அது பாஜகவின் வெற்றிக்கு எளிதாக வழிவகுத்துவிடும் என்பதால், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஒவைசி கட்சியின் கட்டமைப்புகளை சிதைக்கும் பணியை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த திடீர் கட்சித் தாவல் ஏஐஎம்ஐஎம் கட்சியை பாதிக்குமா அல்லது வங்கத்து இஸ்லாமியர்களுக்கான தலைவராக ஒவைசியை மேலும் ஊக்குவிக்குமா என்பது தெரிய நாம் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

Views: - 6

0

0

1 thought on “ஒவைசிக்கு மிகப்பெரும் பின்னடைவு..! மேற்கு வங்கத்தில் கட்சி தாவிய ஏஐஎம்ஐஎம் ஒருங்கிணைப்பாளர்..!

Comments are closed.