தலைநகரில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Author: Aarthi
8 October 2020, 9:04 am
delhi air pollution - updatenews360
Quick Share

டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடைக்காலம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, அதிகளவு வைக்கோல் எரிக்கப்படுவதால் டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

காற்று மாசு அதிகரித்துள்ளதால் பல பகுதிகள் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Views: - 65

0

0