டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: மோசமடைந்த காற்றின் தரம்…!!

14 November 2020, 5:36 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

டெல்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் 11ம் தேதி சற்று அதிகரித்தது. கடந்த இரு தினங்களாக மிக மோசமாக இருந்த காற்றின் தரம், தீபாவளி நாளான இன்று மிகவும் மோசமடைந்தது. டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு நேற்று அறிவிப்பின் படி, 346 ஆக உள்ளது.

air-pollution-updatenews360

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி நாளான இன்று பல இடங்களில் தடையைமீறி பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததாக இதுவரை 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 85 கிலோ பட்டாசுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை தாண்டியதால் டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 26

0

0