அலமேலுமங்காபுரம் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் : கொடியிறக்கத்துடன் நிறைவு…
19 November 2020, 6:12 pmஆந்திரா : திருப்பதி அடுத்த அலமேலுமங்காபுரம் நடைபெற்றுவந்த கார்த்திகை மாத பிரம்மோற்சவம் இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
திருப்பதி அடுத்த அலமேலுமங்காபுரம் பத்மாவதி தாயார் திருக்கோவிலில் கடந்த 11ம் தேதி முதல் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சர்வ பூபால வாகனம், சிம்ம வாகனம், கஜ வாகனம் என பல்வேறு வாகனங்களில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடைசி நாளான இன்று கோவில் எதிரே அமைக்கப்பட்ட சிறிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன்,பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
0
0