சபரிமலையில் இன்று நடைதிறப்பு: ‘NO கொரோனா’ சான்றிதழ் கட்டாயம்…!!!

By: Aarthi
16 October 2020, 11:18 am
kerala cm and temple - updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 250 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என்ற உடல்நல தகுதிச்சான்றிதழ் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

Views: - 52

0

0