நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!
5 September 2020, 5:17 pmநாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதங்கள் கடந்துள்ள ஊரடங்கில் நாட்டின் பொருளாதாரம், இயல்பு வாழ்கை உள்ளிட்ட அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இனியும், தொற்றின் கோர தாண்டவம் முடிந்தபாடில்லை. இந்த சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனையடுத்து மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு கட்ட தளர்வுகளை கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் அதனை பின்பற்றி 4ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்த சூழலில், இ.பாஸ் ரத்து செய்யப்பட்டது, பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களில் குறைந்த அளவு சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கு 10ஆம் தேதி முன்பதிவு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த வழித்தடங்களில் எத்தனை ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
0
0