சிஏஏ ஆதரவாளர்கள் தவிர எல்லாரும் பாஸ்..! ஜாமியா பேராசிரியர் போட்ட ட்விட்டர் பதிவால் சர்ச்சை..!

26 March 2020, 4:43 pm
Jamia_UpdateNews360
Quick Share

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்காத மாணவர்களைப் பற்றி பேசிய ஜாமியா ஆசிரியரின் சமூக ஊடக பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து நேற்று, டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்ததாக அறிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பி.சிதிக்கி ஆசிரியருக்கான இடைநீக்க உத்தரவை பிறப்பித்தார். குடியுரிமை திருத்தச் சட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்காத முஸ்லிமல்லாத 15 பேரைத் தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் ட்வீட் செய்துள்ளார்.

சமூக ஊடக பதிவு வகுப்புவாத வெறுப்பை தூண்டுவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் உணர்ந்தனர். இது ஒரு ஆசிரியரின் தகுதி நடத்தை நெறிக்கு எதிரானது. இது ட்வீட்டை கடுமையான தவறான நடத்தை என்று வகைப்படுத்தியது

விசாரணை நிலுவையில் உள்ளதால், துணை வேந்தரின் உத்தரவின் அடிப்பைடையில், அகமது எனும் அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக சித்திகியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் உதவி பேராசிரியரான அப்ரார் அகமது, தனது பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நையாண்டியாக மட்டுமே அதை போட்டதாகவும், இது ஒரு உண்மைக்குரிய கூற்று அல்ல என்றும் வலியுறுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் எவ்வாறு குறிவைக்கப்பட்டார்கள் என்பதை விளக்குவது ஒரு நையாண்டி என்று வாதிடுவதற்காக அகமது சமூக ஊடகம் பக்கம் திரும்பினார் என கூறப்படுகிறது. மேலும் தேர்வுகள் இல்லாததால் அவர் யாரையும் தோல்வியடைய செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியராக 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில், தன மீது முன்னதாக எந்த புகாரும் இல்லை என்று கூறினார். ட்விட்டரில் எழுதுவதற்கான அதிகபட்ச சொற்களின் வரும் இருப்பதால் தவறாக அர்த்தப்படுத்தி கொண்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

“இப்போது, ​​இந்த பிரச்சினையில் விசாரணைக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதால், அனைத்தும் விரைவில் தெளிவாகிவிடும்” என்று அவர் பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply