மற்ற மாநிலங்களை மிஞ்சிய பஞ்சாப் : அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி!!

Author: Udayachandran
31 July 2021, 2:29 pm
Punjab School Reopen - Updatenews360
Quick Share

பஞ்சாப் : ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அரசு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், இதனை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவுக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க கூறிய முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்வது குறிப்பிடதக்கது.

Views: - 174

0

0