மோடியின் கால்களை அமரீந்தர் சிங் நக்கி கொண்டுள்ளார் : சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் காங்., தலைவர் சித்து!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2021, 1:27 pm
Siddhu Amarinder - Updatenews360
Quick Share

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மோடியின் கால்களை நக்கிக்கொண்டுள்ளார் என சித்து பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க சக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிலும் டெல்லியில் சிம்மாசனம் போட்டுள்ள ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பஞ்சாப்பில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பல்வேறு சர்ச்சைகளை சிக்கி தற்போது கெஞ்சம் ஆசுவாசப்படுத்தி வருகிறது. அமரீந்தர் சிங் பிரச்சனையை முடித்து பின்னர் சித்துவின் விளையாட்டில் வீழ்ந்த காங்கிரஸ் கட்சியின் சர்ச்சை தற்போது அடங்கியுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள சித்து, அமரீந்தர் சிங் அண்மையில் பாஜகவில் இணைந்தது குறித்து கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.

இன்று நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரத்தில் பேசிய அவர், எனக்கான கதவு மூடப்பட்டதாக கூறிய அமரீந்தர் சிங் தற்போது மோடியின் கால்களை நக்கிக்கொண்டுள்ளார் என விமர்சித்து பேசினார்.

COURTESY : ANI

இவரது பேச்சுக்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மிகவும் கீழ்த்தரமாக பேசுவதை சித்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிற கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான அரசியல் பேச்சு அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 336

0

0