கல்வித்துறையிலும் கால்பதிக்கும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம்..! ஜே.இ.இ கோச்சிங் அகாடமி தொடக்கம்..!

13 January 2021, 2:42 pm
Amazon_UpdateNews360
Quick Share

மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர, அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவ, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அகாடமி ஒன்றைத் தொடங்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் தளம், மாணவர்களுக்கு ஜே.இ.இ.க்கு தேவையான ஆழமான அறிவு மற்றும் நடைமுறை கற்றல், ஆசிரியர்களின் நேரடி விரிவுரைகள் மற்றும் கணித, இயற்பியல் மற்றும் வேதியியலில் விரிவான மதிப்பீடுகள் மூலம் தேர்வை எதிர்கொள்ள உதவுகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் அகாடமி செயலியின் பீட்டா பதிப்பு கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் என்று அது கூறியுள்ளது.

அமேசான் அகாடமி மாணவர்களுக்கு தொழில் நுட்ப வல்லுநர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாக் டெஸ்ட்கள், குறிப்புகள் கொண்ட 15,000’க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான விரிவான தீர்வுகள் என பல அம்சங்களை இது கொண்டுள்ளது.

இதில் உள்ள அனைத்து கற்றல் பொருள் மற்றும் தேர்வு உள்ளடக்கங்களும் நாடு முழுவதும் உள்ள நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜே.இ.இ.’யைத் தவிர, BITSAT, VITEEE, SRMJEEE, மற்றும் MET தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களும், இதில் கிடைக்கக்கூடிய தரமான உள்ளடக்க வளங்களிலிருந்து பயனடைவார்கள்.

இதில் உள்ள அனைத்தும் தற்போது இலவசமாகக் கிடைக்கிறது. இந்த இலவச சேவை அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என்றும் பின்னர் கட்டண சேவை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Views: - 7

0

0