உ.பி.யில் நயா பாகிஸ்தான் அமைப்பாரா..? வெற்றி பெற்ற மமதையில் பஞ்சாயத்து தலைவர் அடாவடி..! போலீசார் கைது நடவடிக்கை..!

8 May 2021, 8:05 pm
Arrest_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றெ கையேடு வெற்றி ஊர்வலத்தை மேற்கொள்ளும்போது, நயா பாகிஸ்தான் அமைப்பதாக வாக்குறுதியளித்ததற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது ஐந்து ஆதரவாளர்கள் அமேதியில் கைது செய்யப்பட்டனர்.

அமேதியின் ராம்கஞ்ச் பகுதியில் உள்ள மங்ரா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் கான் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மே 4 அன்று கிராமத்தில் ஒரு பைக் பேரணியை நடத்தினர். அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிரபல தேர்தல் பிரச்சார பாடலான ‘தேகோ இம்ரான் கான் ஆயா, நயா பாகிஸ்தான் லயா’ என்ற பாடல் இசைக்கப்பட்டது.

இந்த பேரணியின் வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதைத் தொடர்ந்து அமேதி மாவட்ட ஆட்சியர் அருண்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார். மே 6 ம் தேதி, கிராமத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மறுநாள் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக வெற்றி ஊர்வலங்களை தேர்தல் ஆணையம் தடைசெய்திருந்த நிலையில் கான் இந்த உத்தரவை மீறி வெற்றி பேரணி நடத்தியது தேர்தல் குற்றமாகும்.

இதையடுத்து அவரது உதவியாளர்களான ஜாபீர் ரெஹ்மான், மக்ஸுத், இஷ்டிகர், அலீம், மற்றும் ஷாருக்கானுடன் பஞ்சாயத்து தலைவர் இம்ரான் காணும் கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களது பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊர்வலத்தின் பாதையில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில் இருந்து கிடைத்த காட்சிகள், பைக் பேரணி இம்ரான் கானால் மேற்கொள்ளப்பட்டது உறுதிப்படுத்தபட்டது. இதையடுத்து தேசிய ஒருங்கிணைப்புக்கு எதிராக வார்த்தைகளை பேசிய மற்றும் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 116

0

0