கர்நாடகாவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா..! உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா..?

16 January 2021, 3:59 pm
Amit_Shah_Yediyurappa_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகல் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பெங்களூருக்கு வந்தார்.

எச்ஏஎல் விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சரை முதல்வர் பி.எஸ்.எடியுரப்பா மற்றும் கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.

அமித் ஷா இன்று மாலையில் நடைபெறும் மாநில பாஜகவின் கோர் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் எடியூரப்பாவின் அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து மாநில பாஜகவில் ஏற்பட்ட பின்விளைவுகள் மற்றும் பிளவு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவுக்கான பொறுப்பாளராக உள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி எல் சந்தோஷ் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.வி.சதானந்த கவுடா மற்றும் பிரஹ்லாத் ஜோஷி ஆகியோர் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

கோர் கமிட்டி கூட்டம் பெலகாவி மக்களவைத் தொகுதிக்கும், மாஸ்கி மற்றும் பசவகல்யான் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களைப் பற்றி விவாதித்து இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பத்ராவதியில் மாநிலத்தின் விரைவான அதிரடி படை பிரிவின் தொடக்க விழாவிலும் அமித் ஷா கலந்துகொள்ள உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை பாகல்கோட் மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். மேலும் கொரோனா காரணமாக சமீபத்தில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடியின் குடும்பத்தினரை சந்தித்து விட்டு, பின்னர் நாளையே டெல்லி புறப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Views: - 0

0

0