மம்தாவின் கோட்டைக்குள் காலூன்றிய அமித் ஷா..! சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்..!

5 November 2020, 12:47 pm
Amit-Shah_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, தனது இரண்டு நாள் மேற்கு வங்க பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பாங்குராவுக்கு சென்றுள்ளார். அமித் ஷா அங்கு தங்கி, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காகவும் தொடர்ச்சியான கூட்டத்தை நடத்த உள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதை உறுதி செய்ய, மேற்கு வங்காளத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை அமித் ஷா சந்திப்பார். 

முன்னதாக பாஜக 2019 பொதுத் தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை வென்று, மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 18 எம்.பி.க்களில், 12 எம்.பி.க்கள் மாநிலத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதற்கிடையே பாஜகவின் தேசிய ஊடக பொறுப்பாளர் அனில் பலூனி வெளியிட்ட ஒரு அறிவிப்பில், “அமித் ஷா தனது மேற்கு வங்க பயணத்தின் போது பழங்குடி மற்றும் அகதி குடும்பங்களுடன் மதிய உணவு சாப்பிடுவார். பாங்குரா மற்றும் கொல்கத்தாவில் பூத் மட்ட களப் பணியாளர்கள மற்றும் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா கூட்டங்களை நடத்துவார்.” என்று கூறினார்.

முன்னதாக நேற்று இரவு, அமித் ஷா கடந்த மாதம் நீதித்துறை காவலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பாஜக தொண்டரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். 

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியதோடு, மக்கள் மத்தியில் திரிணாமுல் கட்சியின் மீது கடும் எதிர்ப்புகள் நிலவும் நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் வேகத்தைக் கூட்ட அமித் ஷாவின் பயணம் உதவும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 17

0

0