சித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்?

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 4:24 pm
Amrinder Singh - Updatenews360
Quick Share

பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை நியமித்து பேரவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க அம்ரீந்தர் சிங் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாநில முதலமைச்சரை மீறி சித்து நியமனம் செய்யப்பட்டார்.

இதனால் அம்ரீந்தர் மற்றும் சித்து இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

The 5 Congress high command tasks Punjab CM Amarinder Singh could struggle  to complete

இதனால் அம்ரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக சித்து ஆதரவாளர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில் பதவி விலக அமரிந்தர் சிங் திட்டம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Views: - 159

0

0