தொடரும் விஷவாயு கசிவு சம்பவம்.! 2 ஊழியர்கள் பலி.!!

30 June 2020, 6:46 pm
Andhra Poison GAs - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடந்த மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 12 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவத்தில் 12 பேர் மரணமடைந்தனர். நான்கு நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.ஒய் ரெட்டிக்கு கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஒருவர் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாட பகுதியில் செயல்படும் சாய்னார் லைப்சயின்ஸ் பார்மா தொழிற்சாலையில் இன்று காலை பெஞ்சிமிடோசோல் என்ற விசவாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் வேலை செய்யும் நரேந்திரா,கவுரி சங்கர் ஆகிய ஊழியர்கள் மரணமடைந்தனர்.

அப்போது தொழிற்சாலையில் 30 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் பெஞ்சிமிடோசோல் வாயு சுவாசித்த ஆறு ஊழியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விஷவாயு கசிவு பற்றிய தகவல் அறிந்த விசாகப்பட்டினம் மாவட்ட உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்துகின்றனர். தற்போது அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.