60 அடி உயர ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி.! அதிர்ச்சி வீடியோ.!!

1 August 2020, 4:12 pm
Andhra Crane Accident - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே ஹிந்துஸ்தான் ஷிப் யார்டில் ராட்சத கிரேன் கவிழ்ந்து விழுந்து 10 ஊழியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே ஹிந்துஸ்தான் ஷிப் யார்ட் என்ற பெயரில் சரக்கு பெட்டகங்களை கையாளும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு அங்கு ராட்சத கிரேன்கள் உள்ளன.

இன்று அங்கிருக்கும் கிரேன்களை ஊழியர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த கிரேனுக்கு அடியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் பத்து பேர் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த துறைமுக தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து சென்று கிரேனுக்கு அடியில் சிக்கி கொண்டுள்ள அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 0

0

0