சாலையில் திடீரென மின்வயர் அறுந்து விழுந்து விபத்து… எலும்புக்கூடான ஆட்டோ… 8 பேர் உடல்கருகி பலியான சோகம்..!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 9:40 am
Quick Share

ஆந்திராவில் சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்திலுள்ள சில்லகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த 6 விவசாயக் கூலி தொழிலாளர்கள் இன்று காலை விவசாய பணிகளுக்காக ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில் சாலையின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்த அணில் ஒன்று ஆட்டோவை பார்த்து பயந்து அந்த பகுதியில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது ஏறியது. கம்பத்தில் ஏறிய அணில் மின்சார வயர் ஒன்றின் மீது ஏறி அருகிலுள்ள வயர் மீது தாவியது.

அப்போது, எதிர்பாராத விதமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்சார வயர் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து அது தீப்பற்றி எரிந்து, அதில் பயணித்த கூலி தொழிலாளர்கள் 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் தீயை அணைத்து எறிந்து எலும்புக்கூடாகி போன 8 விவசாய கூலி தொழிலாளர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 211

0

0