ஆந்திர மாநிலத்தில் ஹெல்மெட் அணிந்து வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் வங்கி ஊழியர் இடம் துப்பாக்கியை காட்டி ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் கசிம்கோட்டா நரசிங்கிபிலி கிராமினா வங்கியில் வங்கி ஊழியர் பிரதாப் ரெட்டி வங்கியில் பணியில் இருந்த போது, மதியம் 2 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் நேராக பிரதாப் ரெட்டி அமர்ந்திருக்கும் கேபினுக்கு சென்று பணத்தை தருமாறு அவரை மிரட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியேற முயலும்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி பணத்தை பைக்குள் போடச்சொல்லி பை ஒன்றை கொடுக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் ரெட்டி வங்கியில் இருந்த ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்தை மர்ம நபர் கொடுத்த பையில் போட்டு கொடுத்தவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
பின்னர் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலையில் அமைந்துள்ள வேறு சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரை தேடி தீவிரமாக வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களை சேகரித்து வருகின்றது.
பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.