செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் தப்பியோட்டம்..! (வீடியோ)

14 February 2020, 8:10 pm
Andhra Govt Doctor Escape - updatenews360
Quick Share

ஆந்திரா : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த ரவீந்திரநாத் தாகூர், அங்குள்ள செவிலியர்கள் இரண்டு பேருக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செவிலியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூற, நேற்று செவிலியர்களின் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மருத்துவர் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில், அவனை சிறையில் அடைக்க போலீசார் காத்திருந்தனர்.

ஆனால் போலீசாருக்கே டிமிக்கி கொடுத்த மருத்துவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் கண்களில் மண்ணை தூவி சென்ற மருத்துவர் மருத்துவர் ரவீந்திரநாத்தைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.