ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நான்கு பேரை உயிருடன் கொளுத்த முயற்சி…

17 August 2020, 9:07 pm
Quick Share

ஆந்திரா: விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக காரில் இருந்த 4 பேரை உயிருடன் தீ வைத்து கொளுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தில் கார் முழுவதும் எரிந்து போன நிலையில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கும் கங்காதரன், நாகவல்லி, வேணுகோபால் ரெட்டி,சிவராமகிருஷ்னா ரெட்டி ஆகியோருக்கும் இடையே நிலம் ஒன்று தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டு நீடித்து வந்தது. இவர்கள் 5 பேரும் விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணா ரெட்டி பேசி தீர்த்து கொள்ளலாம் என்று மற்ற 4 பேரையும் விஜயவாடாவில் உள்ள ஒரு பகுதிக்கு வரவழைத்தார். அங்கு வந்த பின் இங்கு வேண்டாம் வேறு இடத்திற்கு செல்வோம் என்று மூன்று முறை இடங்களை மாற்றினார்.

இந்த நிலையில் இறுதியாக விஜயவாடாவில் உள்ள நோ ஹோட்டல் அருகே 4 பேரையும் வரவழைத்த கிருஷ்ணா ரெட்டி, அவர்கள் காரில் இருந்து இறங்குவதற்கு முன் தன்னிடம் இருந்த கேனில் இருந்த பெட்ரோலை கார் மீது ஊற்றி நான்கு பேரையும் உயிரோடு கொளுத்த முயன்றார். சம்பவத்தில் கார் முழுவதுமாக எரிந்து விட்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கங்காதரன், நாகவல்லி, வேணுகோபால் ரெட்டி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக தப்பித்து கொண்டனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார் கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவருடன் சேர்ந்து நான்கு பேரை உயிருடன் கொளுத்த முயன்றவர்களை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 22

0

0